ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தனது அதிரடியான பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார்.
இந்தாண்டு தொடர்ச்சியாக நம்.3 இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக மாறியதால் இந்த இடம் படிக்கலிடம் சென்றுள்ளது.
கடந்த சீசன்களில் மெதுவாக விளையாடிய படிக்கல் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்.
கடந்த 2020இல் 124, 2021இல் 125, 2023இல் 130, 2024இல் 71 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய படிக்கல் தற்போது 2025 சீசனில் 154.36 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியதாவது:
மனநிலையில் மாற்றம்
டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும்போது மனநிலையில் மாற்றம் வேண்டும். வளர்ந்துகொண்டே இருக்கும் இந்தப் போட்டியில் நேரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்.
நான் விளையாடும் ஷாட்டுகளாக்காக அதிகமாக பயிற்சிசெய்ய வேண்டியிருக்கிறது.
நம்.3இல் தொடர்ச்சியாக களமிறங்குவது மகிழ்ச்சி. நமது பணி என்னவென்று ஒரு தெளிவு இருக்கும்போது அது நமக்கு உதவுகிறது.
அதேவேளையில் நாம் அதைச் சரியாகவும் செய்து முடிக்க வேண்டும். எங்கு இறங்கினாலும் அதைச் சரியாக செய்ய வேண்டும் என்பது முக்கியமானது.
மிடில் ஆர்டரில் அழுத்தம் இல்லை
கடந்த சில ஆண்டுகளில் சரியான முன் தயாரிப்புகள் இல்லாததால் எனது பேட்டிங் பாதிக்கப்பட்டது. அதனால், இந்தாண்டு எனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.
விராட் கோலி, பிலிப் சால்ட் பவர்பிளேவில் நல்ல தருணத்தை அமைத்துவிடுகிறார்கள். ஆனால், அதை தக்கவைக்க பெரிதாக அழுத்தம் ஏற்படுவதில்லை.
அந்தத் தருணங்களை தக்கவைப்பது முக்கியமானதுதான். இதுவரை நான் அதைச் சரியாக செய்திருக்கிறேன். ஆனால், என்னைச் சுற்றி அனுபவமிக்க வீரர்கள் இருப்பதால் எனக்கு களத்தில் சென்று என்ன வேண்டுமானாலும் விளையாட சுதந்திரம் இருக்கிறது.
இறுதியிலும் அதிரடியாக ஆடும் பவர் ஹிட்டர்ஸ் இருக்கிறார்கள். அதனால் எந்த அழுத்தமும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் இவர்தான்; மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு 30% அபராதம்..! 2 தகுதியிழப்புப் புள்ளிகள்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



