ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.
வார்னரின் சாதனையை முறியடித்த விராட் கோலி
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 33 பந்துகளில் 62 ரன்கள் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தார்.
இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 7 சீசன்களில் 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்து டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி சமநிலையில் இருந்தனர்.
இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்ததன் மூலம், டேவிட் வார்னரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 505 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 500+ ரன்களைக் கடந்த வீரர்கள்
விராட் கோலி - 8 முறை
டேவிட் வார்னர் - 7 முறை
கே.எல்.ராகுல் - 6 முறை
ஷிகர் தவான் - 5 முறை
நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



