அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்கத்தா பேட்டிங் தேர்வு: சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

News image
சிஎஸ்கே வீரர்கள், கேகேஆர் கேப்டன்.- படங்கள்: சிஎஸ்கே, ஜியோ ஹாட்ஸ்டார்.
Updated On :7 மே 2025, 1:50 pm

DIN

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ரஷீத், சாம் கரணுக்குப் பதிலாக கான்வே, உர்வில் படேல் அணியில் இணைந்துள்ளதாக எம்.எஸ்.தோனி கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், மொயின் அலி, ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரனா

பிளே ஆஃப் செல்ல வேண்டுமானால் கொல்கத்தா அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது.

சிஎஸ்கே அணி தொடரிலிருந்து வெளியேறியது. இருப்பினும் வெற்றியுடன் இனிவரும் போட்டிகளை முடிக்கும் முனைப்பில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.