47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பதியில் ஐபிஎல் அணியின் உரிமையாளர் வழிபாடு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா ஏழுமலையானை தரிசித்தார்...

News image
சஞ்ஜீவ் கோயங்கா எக்ஸ் தளப் பதிவு
Updated On :16 மே 2025, 2:52 pm

DIN

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா திருமலை கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்தார். தமது குடும்பத்தாருடன் திருப்பதி சென்று அவர் இன்று(மே 16) வழிபாடு நடத்தினார்.

ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் தலைவரான சஞ்சீவ் கோயங்காவின் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 7-ஆவது இடம்பிடித்துள்ளது.

அடுத்ததாக, மே 19 லக்னௌ நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.