ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளார் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் பிலெஸ்ஸிங் முசரபனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் லுங்கி இங்கிடி, தென்னாப்பிரிக்கா அணியுடன் பயிற்சியில் இணையவுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இதனிடையே, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி வருகின்ற மே 26 ஆம் தேதி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவருக்கு மாற்றாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிலெஸ்ஸிங் முசரபனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்காக 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை ரூ. 75 லட்சத்துக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையும் படிக்க : டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!

ஜூன் 14 முதல் 24 க்குள் கிரேட்டா் பெங்களூரு ஆணைய தோ்தல்

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



