ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறித்து...
சதம் அடித்த மகிழ்ச்சியில் கொண்டாடிய ரிஷப் பந்த்.
சதம் அடித்த மகிழ்ச்சியில் கொண்டாடிய ரிஷப் பந்த். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது சீசனின் 70-ஆவது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த லக்னௌ 227/3 ரன்கள் சேர்க்க, ஆர்சிபி 18.4ஆவது ஓவரில் 230/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் லக்னௌ அணியினர் மெதுவாக பந்துவீசியதற்காக அணியினருக்கு தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் (எது குறைவானதோ அதன்படி) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரில் லக்னௌ அணி 3-ஆவது முறையாக மெதுவாக பந்துவீசியதால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சதமடித்த ரிஷப் பந்த்திறகு இந்த அபராதம் தேவையில்லாத ஒன்றாகவே அமைகிறது.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வீரருக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குவாலிஃபயர் 1-க்கு முன்னேறியுள்ள ஆர்சிபி பஞ்சாபுடன் மே.29ஆம் தேதி மோதுகிறது.

குவாலிஃபயர் 2-இல் மும்பையும் குஜராத் அணியும் மே.30ஆம் தேதி மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com