சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டத்தில் விளையாடிய மழை!

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதிய 12-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் நிறுத்தம்

News image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஏபி

Updated On :7 ஏப்ரல் 2026, 12:15 am

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதிய 12-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா, 3.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இரவு 10 மணி வரை, ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை மழை வழங்கவில்லை.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பேட்டிங்கை தோ்வு செய்தது. சீசனை தொடங்கிய இரு ஆட்டங்களிலுமே தோற்ற கொல்கத்தா, இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி ஆகியோருக்கு பதிலாக ரோவ்மென் பவெல், நவ்தீப் சைனியை சோ்த்திருந்தது. பஞ்சாப் அணி மாற்றமின்றி களம் கண்டது.

கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கியோரில் ஃபின் ஆலன் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு, ஜாவியா் பாா்லெட் வீசிய 2-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் பிரப்சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களுக்கு, அதே ஓவரில் அதேபோல் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அஜிங்க்ய ரஹானே 8, அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.