நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தவான் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத்துக்கு 190 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
Updated On :8 நவம்பர் 2020, 3:49 pm

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 

13-வது ஐபிஎல் சீசனின் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தில்லியில் இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினர். இந்த இணை தில்லிக்கு அதிரடி தொடக்கத்தை அளித்தது. பந்துவீச்சாளர்களை மாற்றியும் ஹைதராபாத்துக்குப் பலனில்லை. விளைவு பவர் பிளே முடிவில் தில்லி அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, ரஷித் கான் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பை பிரித்தார். 38 ரன்கள் எடுத்திருந்த அவர் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 86 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தவான் துரிதமாக ரன் சேர்க்க, கேப்டன் ஷ்ரேயஸ் ஒத்துழைப்பு தந்தார். ஷபாஸ் நதீன் சுழலில் சிக்ஸர் அடித்த தவான் 26-வது பந்தில் அரைசத்தை எட்டினார். இதனால், சிறிய பாட்னர்ஷிப் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஷ்ரேயஸும் 21 ரன்களுக்கு ஹோல்டர் வேகத்தில் வீழ்ந்தார்.

தவானுடன் இணைந்த ஷிம்ரோன் ஹெத்மயரும் அதிரடி காட்ட ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், பெரிய ஸ்கோரை நோக்கி தில்லி நகரத் தொடங்கியது. இந்த நிலையில், சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரை நட்ராஜன் சிறப்பாக வீச அதில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெத்மயர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.