சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நீரஜ் சோப்ராவை சந்தித்து பாராட்டிய தலைமை தளபதிகள்

முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ தலைமைத் தளபதி ஆகியோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை நேரில் சந்தித்து பாராட்டினர்.

News image
நீரஜ் சோப்ராவை சந்தித்த முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ தலைமைத் தளபதி
Updated On :10 ஆகஸ்ட் 2021, 4:27 pm

DIN

முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ தலைமைத் தளபதி ஆகியோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை நேரில் சந்தித்து பாராட்டினர்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 

ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததும் நேற்று (ஆக. 9) நாடு திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்கம் வென்ற ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ராவை முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேரில் அழைத்து பாராட்டினார்.

இதேபோன்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவாணேவும் நீரஜ் சோப்ராவை நேரில் அழைத்து பாராட்டினார். 

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ராணுவத்தில் சுபேதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.