அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

News image
வெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி
Updated On :28 ஜனவரி 2024, 3:49 am

DIN

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றியும் தோல்வியும் சகஜம். அதுவும் வாக்கையின் ஒரு பகுதிதான். ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடினார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
“வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ 2020
போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், அதுதான் முக்கியம். வரவிருக்கும்
அடுத்த போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை
அடைகிறது.” என்று பதிவிட்டிருந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 - 5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.

இந்திய வீரர்கள் ஹர்மன்ப்ரீத் சிங் (7வது நிமிடம்), மந்தீப் சிங் (8வது நிமிடம்) கோல் அடித்தனர்.  பெல்ஜியம் அணி வீரர் அலெக்ஸாண்டர் (19, 49, 53வது நிமிடங்களில்) 3 கோல்களை அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். அவருடன், லோயிக் (2வது நிமிடம்), ஜான்-ஜான் டோஹ்மென் (60வது நிமிடம்) தலா ஒரு கோல்களை அடித்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற வழிகோலினர்.

ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்திரேலியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றும், அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு நிறைவேறாமலேயே போனது. எனினும், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.