2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்: ஐசிசி முயற்சி

கிரிக்கெட்டைச் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக்ஸும் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும்...
2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்: ஐசிசி முயற்சி

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டையும் சேர்த்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதுபற்றி ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறியதாவது:

அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் அந்தப் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக் போட்டியில் இணைந்துகொள்ள பல அற்புதமான விளையாட்டுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கிரிக்கெட்டைச் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக்ஸும் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும் என்றார்.

இதற்கு முன்பு 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. அதிலும் இங்கிலாந்தும் பிரான்சும் மட்டும் விளையாடின. இதனால் 128 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சேர்க்க ஐசிசி முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அடுத்த வருடம் பிர்மிங்கமில் நடைபெறவுள்ள 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com