பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றார் நிஷாத் குமார்
By DIN | Published On : 29th August 2021 05:38 PM | Last Updated : 29th August 2021 05:38 PM | அ+அ அ- |

டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றார்.
டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் 2.06 மீட்டர் தாண்டி நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் வெள்ளி வென்ற நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்: கமல்ஹாசன்
இதனிடையே பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.