இதுகுறித்து அளித்த தகவலில் " விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரயில்வே துறையைச் சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் 3 கோடியும் , வெள்ளி வென்றால் 2 கோடி, வெண்கலத்திற்கு 1 கோடி என்கிற அளவில் பரிசுத்தொகையை அளிக்க இருக்கிறோம். மேலும் இறுதிச்சசுற்று வரை செல்லும் வீரர்களுக்கு 35 லட்சம் ரூபாயும் , போட்டியில் கலந்து கொண்டாலே 7.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு 25 லட்சம் ரூபாயும் , வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு 20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு 15 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் " என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது .