பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.
ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில் மீண்டும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தல்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயின் அணியை இந்தியா வென்றதன் மூலம் 4வது வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
இந்திய அணி ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் தனது 13வது பதக்கத்தை பெற்றுள்ளது.
1928 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.