ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன்: யுவ்ராஜ் சிங்

ஐபிஎல் போட்டியில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் மொத்தமாக 36 ரன்கள்...

News image
Updated On :23 ஏப்ரல் 2018, 5:06 am

எழில்

2019 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன் என பிரபல கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

2019 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன். 2019-க்குப் பிறகு என் முடிவை அறிவிப்பேன். கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 17-18 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நிச்சயம் 2019-க்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு யுவ்ராஜ் சிங் ஓய்வு பெறுவது உறுதியாகிவிட்டது.

இந்திய அணிக்காகக் கடைசியாக 2017 ஜூன் மாதம் விளையாடினார் யுவ்ராஜ். தற்போதைய ஐபிஎல் போட்டியில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் மொத்தமாக 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.