தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சிஎஸ்கே-வுக்கு ராசியாக உள்ள கடைசி ஓவர்: பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்!

இதுவரை சிஎஸ்கே விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களின் முடிவுகள் கடைசி ஓவர்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளன... 

News image
Updated On :23 ஏப்ரல் 2018, 6:06 am

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதராபாதுக்கு இது 2-ஆவது தோல்வி.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ராயுடு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களின் முடிவுகள் கடைசி ஓவர்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கேவால் வெற்றியடைய முடியாமல் போனது. எனவே 3 முறை கடைசி ஓவர்களில் சிஎஸ்கே வென்று ரசிகர்களுக்குப் பரபரப்பான தருணங்களை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.