ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸி. வீரர் விலகல்: முக்கியமான வீரரை இழந்தது ஹைதரபாத் அணி!

எனினும் சந்தீப் சர்மா, பசில் தம்பி, நடராஜன், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களின் துணையுடன் இனிவரும் ஆட்டங்களை...

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 7:49 am

எழில்

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஐபிஎல் அணியின் முக்கிய வீரராக உள்ள பில்லி ஸ்டேன்லேக், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான ஸ்டேன்லேக்கை ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ஹைதரபாத் அணி. 23 வயது ஸ்டேன்லேக், இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி ஹைதரபாத் அணிக்குக் கூடுதல் பலமாக விளங்கினார். இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டேன்லேக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி - 8.12. 

இந்நிலையில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டேன்லேக்கின் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துள்ளார் ஸ்டேன்லேக். இதனால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புவனேஸ்வர் குமாரும் காயம் காரணமாக சில ஆட்டங்களில் விளையாடாத நிலையில் ஸ்டேன்லேக்கின் விலகல் ஹைதரபாத் அணிக்குப் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சந்தீப் சர்மா, பசில் தம்பி, நடராஜன், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களின் துணையுடன் இனிவரும் ஆட்டங்களை அந்த அணி எதிர்கொள்ளவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.