திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சதமடித்த ரிஷப் பண்ட் சாதனைகள்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் சில சாதனைகளைப் புரிந்தார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2018, 3:33 pm

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் சில சாதனைகளைப் புரிந்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

5-ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும். மேலும் இதில் சில சாதனைகளையும் படைத்தார்.

ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:

  • 118 - வி.மஞ்சுரேகர் v மே.இ.தீவுகள், 1959
  • 115* - அஜய் ராத்ரா v மே.இ.தீவுகள், 2002
  • 104 - ரித்திமான் சாஹா v மே.இ.தீவுகள், 2016
  • 100* - ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, 2018

டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்ஸருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள்:

  • கபில் தேவ் v மே.இ.தீவுகள், தில்லி, 1978/79
  • இர்ஃபான் பதான் v பாகிஸ்தான், பெங்களூரு, 2007/08
  • ஹர்பஜன் சிங் v நியூஸிலாந்து, அகமதாபாத், 2010/11
  • ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, ஓவல், 2018

சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள்:

  • 20 வயது 150  நாட்கள் - அஜய் ராத்ரா v மே.இ.தீவுகள், 2002
  • 20 வயது 342 நாட்கள் - ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, 2018
  • 21 வயது 188 நாட்கள் - வி.மஞ்சுரேகர் v மே.இ.தீவுகள், 1959

4-ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:

  • 100* ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, ஓவல், 2018
  • 76* எம்.எஸ்.தோனி v இங்கிலாந்து, லார்ட்ஸ், 2007
  • 67* பார்திவ் படேல் v இங்கிலாந்து, மொஹாலி, 2016
  • 63 தீப் தாஸ் குப்தா v தென் ஆப்பிரிக்கா, போர்ட் எலிசபத், 2001

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.