'தொடர்ந்து 5 அரைசதங்கள், 43 சதவீத மொத்த ரன்கள்'- வார்னர், பிஞ்ச் ஜோடி அசத்தல் சாதனை!

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். 
'தொடர்ந்து 5 அரைசதங்கள், 43 சதவீத மொத்த ரன்கள்'- வார்னர், பிஞ்ச் ஜோடி அசத்தல் சாதனை!
Published on
Updated on
1 min read

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஜோடிகளான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். டேவிட் வார்ன் 53 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 100 ரன்களும் விளாசினர். 

இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பையில் பல சாதனைகளையும் படைத்தள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு:

உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் கண்ட முதல் துவக்க ஜோடியாக வார்னர், பிஞ்ச் திகழ்கின்றனர். இதுவரை உலகக் கோப்பையில் தொடர் அரைசதம் கடந்த ஜோடிகளின் விவரம் பின்வருமாறு:

  • கிறிஸ் தவரே, கிரீம் ஃபௌலர் (4) 1983
  • டேவிட் பூண், ஜெஃப் மார்ஷ் (4) 1987 முதல் 1992 வரை 
  • ஆமிர் சொஹைல், சயீத் அன்வர் (4) 1996 
  • ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன் (4) 2003

2019 உலகக் கோப்பையில் 3 சதங்கள் கண்ட துவக்க ஜோடியாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் திகழ்கிறார்கள்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (123) குவித்த ஜோடி என்ற சாதனையை வார்னர், பிஞ்ச் படைத்தனர்.

நடப்பு உலகக் கோப்பையில் இதுவரையிலான ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி எடுத்த ரன்களில் 42.6 சதவீதம் அதாவது 996 ரன்களை இந்த ஜோடி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com