பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு 'நோ' சொன்ன பிசிசிஐ !

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) செய்யபபட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா...

News image
Updated On :2 அக்டோபர் 2016, 8:17 am

DIN

மும்பை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) செய்யபபட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த் குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 4-ந்தேதி தாக்கல் செய்தது.

அதில், '70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது, கிரிக்கெட் அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை அனுமதிக்கக்கூடாது, ஒருவர் மூன்று முறைக்கு மேல் நிர்வாகியாக தொடரக்கூடாது, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் வாக்களிக்க ஒரு மாநிலத்துக்கு ஒரு சங்கத்துக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு அதிரடி பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் லோதா குழு பரிந் துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 6-ம் தேதிக்குள் பிசிசிஐ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் சனிக்கிழமை அன்று கூடியது.

இந்த கூட்டத்தில் லோதா குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒரு சில பரிந்துரைகளை மட்டும் ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, ஒரு மாநிலத்துக்கு ஒரு சங்கத்துக்கு மட்டுமே ஓட்டுரிமை, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை நிராகரித்துவிட்டது.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தினால் வர்த்தக ரீதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.