டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 28 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 12 ஆட்டங்களும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 10 ஆட்டங்களும், திருநெல்வேலியில் 9 ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். செப்டம்பர் 18-ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே, 40 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், கடைசி 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள். இதுவரை மேத்யூ ஹேடன், ரெய்னா, பிரெட் லீ ஆகியோர் டிஎன்பிஎல் போட்டியை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கெய்ல், பிராவோ ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். சென்னை வேலம்மாள் பள்ளிக்குச் சென்று இருவரும் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்கள். அடுத்ததாக, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிற காரைக்குடி - மதுரை இடையேயான போட்டியையும் இருவரும் காண உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


