ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் என். சீனிவாசன் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம்.
ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. தடை இந்த வருட ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மீண்டும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


