ஐபிஎல்: நடத்தை விதிமுறையை மீறிய தோனிக்கு எச்சரிக்கை!
நடத்தை விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 54 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் அஜிங்க்ய ரஹானே 34 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார்.
நேற்றைய போட்டியில் பொலார்டுக்கு எல்பிடபிள்யூ கோரியபோது நடுவர் மறுத்தார். உடனே தோனி டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார். ஐபிஎல்-லில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படுவது இல்லை.
இதனால் நடத்தை விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...