குஜராத்தை பந்தாடியது ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது ஹைதராபாத். அதேநேரத்தில் குஜராத் அணி 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
ஹைதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணியை நிலைகுலைய வைத்தார்.
ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவிக்க, அந்த அணியின் வெற்றி மிக எளிதானது.
ரஷித் கான் அபாரம்: ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில் ஜேசன் ராய்-மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்தது. மெக்கல்லம் 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேப்டன் சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார். அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார். அடுத்த ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார், ஜேசன் ராயை 31 ரன்களில் (21 பந்துகள்) வீழ்த்தினார். இதையடுத்து களம்புகுந்த ஆரோன் ஃபிஞ்சை 3 ரன்களில் வீழ்த்தினார் ரஷித் கான். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ஓரளவு சிறப்பாக ஆட, 9-ஆவது ஓவரை வீசிய ரஷித் கான், ரெய்னாவை 5 ரன்களில் வெளியேற்றினார். இதனால் குஜராத் அணி 9 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
5-ஆவது விக்கெட்டுக்கு 56: இதன்பிறகு தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் டுவைன் ஸ்மித். குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. தினேஷ் கார்த்திக் 32 பந்துகளில் 30 ரன்களும், டுவைன் ஸ்மித் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. பாசில் தம்பி 13, பிரவீண் குமார் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வார்னர் அதிரடி: 136 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணியின் இன்னிங்ûஸ கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் தொடங்கினர். 3-ஆவது ஓவரை கேப்டன் ரெய்னா வீச, அதில் ஷிகர் தவன் ஒரு சிக்ஸரையும், வார்னர் 2 சிக்ஸர்களையும் விளாசி அதிரடியில் இறங்கினர்.
பிரவீண் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஷிகர் தவன் (9 ரன்கள்) ஆட்டமிழக்க, மோசஸ் ஹென்ரிக்ஸ் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் வார்னர் தொடர்ச்சியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஹென்ரிக்ஸýம் தொடர்ந்து அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 89 ரன்களை எட்டியது ஹைதராபாத்.
இதனிடையே பாசில் தம்பி பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 31 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் வார்னர். அவரைத் தொடர்ந்து மோசஸ் ஹென்ரிக்ஸ் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய வார்னர், தேஜாஸ் பரோக்கோ வீசிய 16-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் "லாங் ஆன்' திசையில் பிரமாண்ட சிக்ஸரை விளாச, ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. வார்னர் 45 பந்துகளில் 76 ரன்களும், ஹென்ரிக்ஸ் 39 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தந்தையை இழந்த சோகத்திலும் ரசிகர்களை மகிழ்வித்த ரிஷப் பந்த்!
பெங்களூரு, ஏப்.9: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த டெல்லி அணியில் முன்னணி வீரர்கள் சொதப்பியபோதும், ரிஷப் பந்த் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி படுதோல்வியிலிருந்து தப்பியது. ஆனால் ரிஷப் பந்த் தனது தந்தையை இழந்த துக்கத்துக்கு மத்தியில் அசத்தலாக ஆடியது, ஆட்டம் முடிந்த பிறகே நிறைய பேருக்கு தெரியவந்தது. ரிஷப் பந்தின் தந்தை, கடந்த புதன்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதையடுத்து பெங்களூரில் இருந்து வீடு திரும்பிய ரிஷப் பந்த், ஹரித்துவாரில் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கை செய்துவிட்டு வெள்ளிக்கிழமை பெங்களூர் திரும்பினார். அன்று மதியமே பயிற்சி முகாமுக்கு சென்ற அவர், சனிக்கிழமை 57 ரன்கள் குவித்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...