அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராணா, பாண்டியா அதிரடி; மும்பைக்கு முதல் வெற்றி

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.

News image
வெற்றிக் களிப்பில் பாண்டியா.
Updated On :9 ஏப்ரல் 2017, 8:04 pm

DIN

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
மும்பை அணி வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதிஷ் ராணா, ஹார்திக் பாண்டியா அதிரடியில் இறங்க, ஒரு பந்து மீதமிருக்கையிலேயே அந்த அணி இலக்கை எட்டியது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கெüதம் கம்பீர்-கிறிஸ் லின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்தது. கம்பீர் 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த உத்தப்பா 4 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, கொல்கத்தா 7.3 ஓவர்களில் 67 ரன்களை எட்டியபோது கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
பாண்டே 81*: பின்னர் வந்த யூசுப் பதான் 6 ரன்களில் நடையைக் கட்ட, சூர்யகுமார் களம்புகுந்தார். இதன்பிறகு பாண்டே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட, சூர்யகுமார் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு கிறிஸ் வோக்ஸ் களமிறங்க, மணீஷ் பாண்டே 37 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் தொடர்ந்து வேகம் காட்ட, கிறிஸ் வோக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுநீல் நரேன் களமிறங்க, மெக்லீனாகான் வீசிய கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார் பாண்டே.
அந்த ஓவரின் கடைசிப் பந்தில் சுநீல் நரேன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. மணீஷ் பாண்டே 47 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார். மும்பை தரப்பில் கிருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பான தொடக்கம்: பின்னர் பேட் செய்த மும்பை அணியில் பார்த்திவ் படேல்-ஜோஸ் பட்லர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 65 ரன்கள் சேர்த்தது. படேல் 27 பந்துகளில் 30, ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு வந்தவர்களில் கேப்டன் ரோஹித் சர்மா 2, கிருனால் பாண்டியா 11 ரன்களில் நடையைக் கட்ட, நிதிஷ் ராணாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். கடைசி 4 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 17-ஆவது ஓவரில் போலார்ட் (17 ரன்கள்) ஆட்டமிழக்க, ராணாவுடன் இணைந்தார் பாண்டியா. இவர்கள் இருவரும் அதே ஓவரில் தலா ஒரு பவுண்டரியை விரட்ட, கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் மும்பை வெற்றி பெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.
திருப்புமுனை: டிரென்ட் போல்ட் வீசிய 18-ஆவது ஓவரில் ராணா ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாச, பாண்டியா தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விரட்டினார். இதனால் அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைக்க, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அங்கித் ராஜ்புட் வீசிய 19-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி அரை சதம் கண்ட கையோடு ராணா ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார். இதையடுத்து ஹர்பஜன் சிங் களமிறங்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் பாண்டியா ஒரு சிக்ஸரை விளாசினார்.
இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. போல்ட் வீசிய அந்த ஓவரில் பாண்டியா அதிரடியாக ஆட, சூர்யகுமாரின் மோசமான பீல்டிங்கால் மும்பைக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. அதற்கடுத்ததாக பாண்டியா கொடுத்த கேட்ச்சை ரிஷி தவன் கோட்டைவிட்டார். அடுத்த பந்தில் பாண்டியா பவுண்டரியை விளாச, மும்பை அணி 19.5 ஓவர்களில் 180 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. பாண்டியா 11 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29, ஹர்பஜன் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பைத் தரப்பில் அங்கித் ராஜ்புட் 4 ஓவர்களில் 37 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிதிஷ் ராணா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.