அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எந்த இலக்கையும் எட்டிப் பிடிப்போம்

எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்கும் நம்பிக்கையுடன இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன கெளதம் கம்பீர் கூறினார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 7:23 pm

DIN

எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்கும் நம்பிக்கையுடன இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன கெளதம் கம்பீர் கூறினார்.
கொல்கத்தா-புணே அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில், கொல்கத்தாவின் வெற்றி குறித்து கேப்டன் கம்பீர் கூறியதாவது:
என்னைப் பொருத்த வரையில், எதிரணி நிர்ணயிக்கும் எந்தவொரு இலக்கையும் அடைந்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. புணேவை 180 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது கடினமான ஒன்று. அதற்கான பாராட்டுகள் அணியின் பந்துவீச்சாளர்களைத்தான் சேர வேண்டும் என்று கம்பீர் கூறினார்.
'என் மீது நம்பிக்கை உள்ளது': இதனிடையே, அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா கூறுகையில், 'எப்போதும் உறுதியாக இருக்கும் நான், எனது செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். கீப்பிங்கைப் பொருத்த வரையில் மகிழ்ச்சியுடன் அந்தப் பணியைச் செய்கிறேன்.
சிறந்த கீப்பருக்கென தோனி ஒரு இலக்கு நிர்ணயித்துவிட்டார். அதைநோக்கி மெதுவாக, சரியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.