டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஜடேஜா

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார். இந்திய கேப்டன் விராட் கோலி,

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 7:27 pm

DIN

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார். இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான புதிய பட்டியலை ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதன்படி, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்களில் முதன்மையாக சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்தில் உள்ளார். அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 39-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய வீரர் அஸ்வின், இலங்கை கேப்டன் ரங்கனா ஹெராத்தை பின்னுக்குத்தள்ளி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, ஓரிடம் முன்னேறி 23-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், இந்தியர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்தனர். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.