சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

'ஹாட்ரிக்' மொயீன் அலி நிகழ்த்திய சாதனைகள்!

இங்கிலாந்தில் ஹாட்ரிக் எடுத்துள்ள முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்... 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 9:53 am

எழில்

லண்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மொயீன் அலி வீசிய 76-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் டீன் எல்கர் (228 பந்துகளில் 136 ரன்கள்) ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் காகிசோ ரபாடா (0) ஆட்டமிழந்தார். இதன்பிறகு 78-ஆவது ஓவரை வீசிய மொயீன் அலி, முதல் பந்தில் மோர்கலை (0) வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் மொயீன் அலி.

டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் 4-ஆவது சுழற்பந்து வீச்சாளர். ஆனால், இங்கிலாந்தில் ஹாட்ரிக் எடுத்துள்ள முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்.

கடந்த 79 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்.

இதுதவிர , ஒட்டுமொத்தத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 13-ஆவது இங்கிலாந்து வீரர்.

ஓவல் மைதானத்தில் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் மொயீன் அலி.

1957-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர், மொயீன் அலி.

ஒரு டெஸ்ட் போட்டி ஹாட்ரிக் சாதனையுடன் முடிந்தது இது நான்காவது முறை. கடைசியாக தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 1957 - 58-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஹாட்ரிக் சாதனையுடன் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.