ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அர்ஜூனா விருதுக்கு மாரியப்பன் பரிந்துரை!

புஜாரா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் மாரியப்பனும் இடம் பெற்றுள்ளார்...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 9:13 am

எழில்

கிரிக்கெட் வீரர் புஜாரா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.

விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டுக்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது, ராஷ்ய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புஜாரா, ஹர்மன்ப்ரீத் கெளர், சாகேத் மைனேனி, மாரியப்பன், விஜே ஸ்வேதா, குஷ்பிர் கெளர், ஆரோக்கிய ராஜிவ், பிரசாந்தி சிங், எஸ்வி சுனில், செளராஸியா, சத்யவ்ரத், ஆண்டனி அமல்ராஜ், பிஎன் பிரகாஷ், ஜஸ்விர் சிங், தேவேந்த்ரோ சிங், பிம்பா தேவி, வருண் பாதி ஆகிய 17 பேரைத் தேர்வுக் குழு அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்குத் தேர்வானவர்களை மத்திய அரசு முறைப்படி அறிவிக்கவுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரரான மாரியப்பன், கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றார்.

இந்த வருடத் தொடக்கத்தில் மாரியப்பனைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்தது. தற்போது அர்ஜூனா விருதைப் பெறவுள்ளார் மாரியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.