இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புஜாரா, ரஹானே சதம்; முதல் நாளில் இந்தியா-344/3

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2017, 7:20 pm

DIN

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.
சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வைரஸ் காய்ச்சலில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் அணிக்குத் திரும்பினார். இதையடுத்து அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டார்.
அதிரடி தொடக்கம்: இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் சேர்த்த ஷிகர் தவன் 37 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ராகுல் அரை சதம்: இதையடுத்து ராகுலுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 27-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் 72 பந்துகளில் அரை சதம் கண்டார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியா 30.4 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்துவீச்சில் மேத்யூஸிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து அஜிங்க்ய ரஹானே களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா 112 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து இருவரும் சிறப்பாக ஆட, 51-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது இந்தியா.
புஜாரா சதம்: இதன்பிறகு ரஹானே 83 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து புஜாரா 164 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 13-ஆவது சதம் இது. அதேநேரத்தில் இந்தத் தொடரில் அவர் அடித்த 2-ஆவது சதமாகும். இதனால் இந்தியா 77-ஆவது ஓவரில் 300 ரன்களை எட்டியது.
இதனிடையே ரஹானே 151 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது சதம் இது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கைத் தரப்பில் ஹெராத், பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.