கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: யுவராஜ் சிங் நீக்கம்

இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2017, 12:04 am

DIN

இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. இதுவரை 304 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 8,701 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர 40 டெஸ்ட் போட்டி மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதனால் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், முகமது சமி மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒரு நாள் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பூம்ரா, அஜிங்க்ய ரஹானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.