மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2017, 8:04 pm

DIN

இலங்கைக்கு எதிரான 3}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லஹிரு திரிமானி அதிகபட்சமாக 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். சன்டிமல் 36, சிறிவர்த்தனா 29, கேப்டன் கபுகேதரா 14, டிக்வெல்லா 13, மேத்யூஸ் 11 ரன்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அசத்தலாக ஆட, மறுமுனையில் ஷிகர் தவன் 5, கேப்டன் விராட் கோலி 3, கே.எல்.ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கேதார் ஜாதவ் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த தோனி நிதானமாக ஆட, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 118 பந்துகளில் சதமடித்தார்.
இந்தியா 210 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆத்திரமடைந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் நடைபெற்றது. இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124, தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.