தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இதனிடையே இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவைச் சேர்ந்த 3 பேர் கலந்துகொண்ட கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அணி விவரம் பின்வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பார்திவ் படேல், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


