சுடச்சுட

    

    இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு

    By Raghavendran  |   Published on : 04th December 2017 08:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Bumrah-PTI

     

    இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.

    டிசம்பர் 20-ந் தேதி கட்டாக்கில் உள்ள பாராபட்டி மைதானத்தில் முதல் டி20-யும், டிசம்பர் 22-ந் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 2-ஆவது டி20-யும், டிசம்பர் 24-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் 3-ஆவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.

    இதில், ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    15 பேர் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு:

    ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பாஸில் தம்ப்பி, ஜயதேவ் உனாட்கட்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai