இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு
Updated on
1 min read

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.

டிசம்பர் 20-ந் தேதி கட்டாக்கில் உள்ள பாராபட்டி மைதானத்தில் முதல் டி20-யும், டிசம்பர் 22-ந் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 2-ஆவது டி20-யும், டிசம்பர் 24-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் 3-ஆவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.

இதில், ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பாஸில் தம்ப்பி, ஜயதேவ் உனாட்கட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com