மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விராட் கோலி: ஒருநாள், டி20 தரவரிசைகளில் நெ.1; டெஸ்டில் நெ.2

டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள விராட் கோலி - ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடம்...

News image
Updated On :7 டிசம்பர் 2017, 10:39 am

எழில்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். புஜாரா 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு இரட்டைச் சதங்கள் உள்ளிட்ட மூன்று சதங்களுடன் 610 ரன்கள் எடுத்தார் கோலி. இதன்மூலம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 938 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

ஸ்மித், கோலி, ரூட், புஜாரா, கேன் வில்லியம்சன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளார்கள்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 870 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் அஸ்வின் 4-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ஜேம்ஸ் ஆண்டர்சன், ரபடா, ஜடேஜா, அஸ்வின், ஹெராத் ஆகியோர் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா 2-ம் இடத்திலும் அஸ்வின் 4-ம் இடத்திலும் உள்ளார்கள்.

ஷகிப் அல் ஹசன், ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், அஸ்வின், மொயீன் அலி ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 2-ம் இடத்திலும் டி20 தரவரிசையில் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள விராட் கோலி - ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடம் வகிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.