6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகள்: மும்பையை 173 ரன்களுக்குச் சுருட்டிய வினய் குமார்! (வீடியோ)

ஹாட்ரிக் எடுத்து அசத்திய வினய் குமார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்... 

News image
Updated On :7 டிசம்பர் 2017, 9:19 am

எழில்

கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 173 ரன்களுக்குச் சுருண்டது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை - கர்நாடகம், தில்லி - மத்திய பிரதேசம், கேரளம் - விதர்பா, குஜராத் - மேற்கு வங்கம் ஆகிய அணிகள் இடையேயான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. அனைவரும் எதிர்பார்க்கும் மும்பை - கர்நாடகம் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.

நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் பிருத்வி ஷாவின் விக்கெட்டை எடுத்த வினய் குமார் தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் பிஸ்டா, ஆகாஷ் பர்கர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார்.  இதனால் ஏழு ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.

வினய் குமார் எடுத்த முதல் மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் கருண் நாயரின் ஸ்லிப் கேட்ச்சுகள் மூலமாகக் கிடைத்தன. இந்திய அணி ஸ்லிப் கேட்சுகளில் தடுமாறி வருகிற நிலையில் கருண் நாயரின் ஸ்லிப் கேட்சுகள் ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளன. 

உணவு இடைவேளையின்போது மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. பிறகு 103 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டது. தவல் குல்கர்ணி தனது அதிரடி ஆட்டத்தால் மும்பை அணிக்குக் கடைசிக்கட்டத்தில் நிறைய ரன்களைச் சேர்த்தார். 86 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கடைசியில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த தவல் குல்கர்னி அரவிந்த் ஸ்ரீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்துள்ளது. ஹாட்ரிக் எடுத்து அசத்திய வினய் குமார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

33 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2013-ல் இந்திய அணியில் பங்கேற்றார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஹாட்ரிக் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.