மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தரம்சாலாவில் தடுமாறும் இந்தியா: 6 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

News image
Updated On :10 டிசம்பர் 2017, 7:22 am

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதல் இரண்டு ஓவர்களில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில், ஷிகர் தவன் டக்-அவுட்டானார். பின்னர் 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 18 பந்துகளைச் சந்தித்தும் ரன் எடுக்கத் தவறி பூஜ்ஜியத்தில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள், மணீஷ் பாண்டே 2 ரன்கள், பாண்டியா 10 ரன்களுடனும் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 15.2 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இலங்கை தரப்பில் லக்மல் 3, மேத்யூஸ் 1, பிரதீப் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.