மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தரம்சாலா ஒருநாள்: இந்திய அணி முதல் பேட்டிங்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

News image
Updated On :10 டிசம்பர் 2017, 5:59 am

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனவே, அதே உத்வேகத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் காணும். மறுபுறம், டெஸ்ட் தொடரில் இழந்த வெற்றியை ஒருநாள் தொடரில் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை உள்ளது.

விராட் கோலிக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா அணிக்கு தலைமை தாங்குகிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியை இந்தியா  ஒயிட்வாஷ் செய்யும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடம் பிடிக்க இயலும். 

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அணிகள் விவரம்:

இந்தியா

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா.

இலங்கை

திசர பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, லாஹிரு திரிமானி, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், அசெலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), அகிலா தனஞ்ஜெயா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், சச்சித் பதிரனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.