தில்லியில் உள்ள பிரபல DAP & Co. என்ற நிறுவனம் சொகுசு உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை நடத்தி வருகிறது. இதில், தில்லியில் செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளுக்கு ''இப்படிக்கு கௌதம் கம்பீர்'' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனது பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது எதிர்தரப்பு சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, கம்பீரின் வழக்கை ரத்து செய்தார்.
மதுபான விடுதி நிறுவனத்தின் தரப்பில் தங்களின் முதலாளியின் பெயரும் கௌதம் கம்பீர் என்பதால் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


