சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ராகுல் அரைசதம், தோனி-பாண்டே ஜோடி அதிரடி: இந்தியா 180 ரன்கள் குவிப்பு

கட்டாக்கில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2017, 3:14 pm

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இதுவரை 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதியுள்ளது. இந்த இரண்டிலுமே இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல், 48 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோஹித் ஷர்மா 17, ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, பாண்டே ஜோடி அதிரடியாக ஆடியது. 

தோனி 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 39 ரன்களும், பாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 32 ரன்களும் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் மேத்யூஸ், பெரேரா, பிரதீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.