சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

முதல் டி20: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

கட்டாக்கில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2017, 1:30 pm

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இதுவரை 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதியுள்ளது. இந்த இரண்டிலுமே இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

எனவே, எஞ்சியுள்ள டி20 தொடரையும் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களம் காண்கிறது 

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அணிகள் விவரம்

இந்தியா

ரோஹித் ஷர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ஜெயதேவ் உனத்கட், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா.

இலங்கை

திசர பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ஏஞ்ஜெலோ மேத்யூஸ், குசல் பெரேரா, அசெலா குணரத்னே, டாசன் சனகா, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்சயா, விஷ்வா ஃபெர்னான்டோ, நுவான் பிரதீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.