பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

100 இந்திய பிரபலங்கள்: சச்சின், தோனியை முந்திய விராட் கோலி!

ஃபோர்ப்ஸ் இதழ், 2017-ம் ஆண்டுக்கான 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது...

News image
Updated On :22 டிசம்பர் 2017, 12:02 pm

எழில்

ஃபோர்ப்ஸ் இதழ், 2017-ம் ஆண்டுக்கான 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ரூ. 232 கோடி சம்பாதித்த சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். ரூ. 170 கோடியுடன் ஷாருக்கானும் ரூ. 100 கோடியுடன் விராட் கோலியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளார்கள். கடந்த வருடமும் இவர்கள் மூவரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தார்கள்.

ரூ. 82 கோடியுடன் சச்சின் 5-வது இடத்தையும் ரூ. 63 கோடியுடன் தோனி 8-வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 7-வது இடமும் தீபிகா படுகோனுக்கு 11-வது இடமும் பி.வி. சிந்துவுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன. ரூ. 29 கோடியுடன் விஜய் 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெயம் ரவி 39-வது இடம்பிடித்துள்ள இந்தப் பட்டியலில் ரஜினி, கமல் இடம்பெறவில்லை. ஆனால் ரூ. 11 கோடியுடன் தனுஷ் 70-வது இடத்தில் உள்ளார். 

இந்தியப் பிரபலங்களின் ஒரு வருட வருமானத்தைக் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியதாக ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வருடப் பட்டியலில் 11 தென்னிந்திய நடிகர்களே இடம்பெற்றார்கள். ஆனால் இந்தமுறை 13 பேர் இடம்பிடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.