ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி எனக்குள்ளது 

இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி, ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி தனக்குள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி எனக்குள்ளது 
Updated on
1 min read

இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி, ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி தனக்குள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-இல் தரவரிசையின் முதல் 100 இடங்களுக்குள்ளாக வந்த யூகி பாம்ப்ரியின் முன்னேற்றத்துக்கு, காயம் ஒரு தடைக்கல்லாக அமைந்தது. 2017-இல் அவர் அதிக போட்டிகளில் விளையாடவில்லை எனினும், புணே சேலஞ்சர் பட்டத்தை வென்றது, பெங்களூரு ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியது அவருக்கான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து யூகி பாம்ப்ரி கூறியதாவது:
பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதும், முடிந்த வரையில் விளையாடுவதுமே முன்னேற்றத்துக்கு முக்கியமாகும். சில ஏடிபி போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியுள்ளேன். ஏடிபி, சேலஞ்சர், ஐடிஎஃப் ஃபியூச்சர்ஸ் என எந்த போட்டியாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.
என்னைப் பொருத்த வரையில், ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி எனக்கு உள்ளது. மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் மூலமாக அடுத்த சீசன் தொடங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் பிரபல பயிற்சியாளரான ஸ்டீபன் கூனிடம் பாங்காக்கில் பயிற்சி பெற்றேன்.
கொரியா, தைவான், ஜப்பான், ஜார்ஜியா என ஆசியாவின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்றனர். அந்தச் சூழல் சிறப்பான ஒன்றாக இருந்தது. பயிற்சியின்போது என்னை மேம்படுத்திக் கொள்ள முயன்றேனே தவிர, ஒட்டுமொத்தமாக நெருக்கடியில் ஆழ்த்திக் கொள்ளவில்லை.
பேக்ஹேண்ட் ஷாட், ஃபோர்ஹேண்ட் ஷாட் என ஒவ்வொன்றிலுமாக சிறிதளவு மேம்பட்டுள்ளேன். மகாராஷ்டிர ஓபனை நல்லமுறையில் தொடங்குவது சிறப்பாக இருக்கலாம். ஆனால், அடுத்து வருவது நீண்ட சீசனாக இருக்கும். தொடர்ந்து 25 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. எனவே, வாழ்வா, சாவா ஆட்டமாக விளையாடப் போவதில்லை என்று யூகி பாம்ப்ரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com