47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐஎஸ்எல்: புணே பயிற்சியாளருக்கு தடை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில், போட்டி அதிகாரிகளை தவறாக விமர்சித்ததாக எஃப்சி புணே அணி பயிற்சியாளர் ரேங்கோ போபோவிச்சுக்கு 4 ஆட்டங்களில் தடையும், ரூ.5 லட்சம் அபராதமும்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:38 pm

DIN

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில், போட்டி அதிகாரிகளை தவறாக விமர்சித்ததாக எஃப்சி புணே அணி பயிற்சியாளர் ரேங்கோ போபோவிச்சுக்கு 4 ஆட்டங்களில் தடையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் கடந்த 23-ஆம் தேதி எஃப்சி புணே சிட்டி-எஃப்சி கோவா அணிகளிடையேயான ஆட்டத்தின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு விதிகளின் கீழ், ரேங்கோவுக்கு 4 ஆட்டங்களில் (டிச.23 முதல்) பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 
அத்துடன் ரூ.5 லட்சம் அபராதம் 10 நாள்களில் செலுத்தப்படாவிட்டால், அதை செலுத்தும் நாள் வரையில் அவருக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.