ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

டி20: பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய நியூஸிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது... 

News image
Updated On :29 டிசம்பர் 2017, 5:45 am

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

நெல்சனில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மன்ரோ, பிலிப்ஸ் ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். மன்ரோ 53, பிலிப்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இருவரும் தலா 2 சிக்ஸர் அடித்தார்கள். கடைசிக்கட்டத்தில் டெய்லர், சாண்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் நியூஸிலாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது.

கடினமான இலக்கை எதிர்கொண்ட மே.இ. அணியால் நியூஸிலாந்தின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் போனது. இதனால் அந்த அணி 19 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 8 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்ததோடு கெய்லின் ஆட்டம் முடிவுபெற்றது. 4 மே.இ. வீரர்கள் 20 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் யாராலும் நிலைத்து விளையாடமுடியவில்லை. பிளெட்சர் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். அவ்வளவுதான். நியூஸிலாந்து அணித் தரப்பில் ரான்ஸ், செளதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.  ஆட்ட நாயகன் விருது  பிலிப்ஸுக்கு வழங்கப்பட்டது.

Story image

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்தாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் டி20 தொடரை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அந்தளவுக்கு டி20 கிரிக்கெட்டில் பலமான அணியாக உள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் அற்புதமான பேட்டிங், துல்லியமான பெளலிங்கால் நியூஸிலாந்து அணி மே.இ. அணியை அழகாக வென்றுவிட்டது. 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.