ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நன்றி மறவா ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர் என்றால் டென்னிஸ்; டென்னிஸ் என்றால் ஃபெடரர். டென்னிûஸயும், ஃபெடரரையும் எந்தக் காலத்திலும் பிரித்துப் பார்க்க முடியாது.

News image
Updated On :3 பிப்ரவரி 2017, 11:00 am

க.தி.மணிகண்டன்

ரோஜர் ஃபெடரர் என்றால் டென்னிஸ்; டென்னிஸ் என்றால் ஃபெடரர். டென்னிûஸயும், ஃபெடரரையும் எந்தக் காலத்திலும் பிரித்துப் பார்க்க முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், டென்னிûஸப் பற்றி பேசுவதாக இருந்தால் அதில் ஃபெடரரின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவராகத் திகழும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது சாம்பியன் பட்டம் வென்றபோது அவருடைய ஆட்டத்திறன் இன்னும் மங்கிவிடவில்லை என்பதை டென்னிஸ் உலகம் உணர்ந்தது.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான ஃபெடரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார். டென்னிஸ் உலகின் உச்சத்தில் இருந்தாலும், அதை எப்போதுமே அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. சிரித்த முகம்தான் அவருடைய அடையாளம்.

ஃபெடரரை தலைசிறந்த டென்னிஸ் வீரராக மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், அவரை சிறந்த விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி ஆகச்சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம். அவர், எவ்வளவு பெரிய மனிதம் நிறைந்த மனிதர், நன்றி உள்ளம் கொண்டவர் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

ரோஜர் ஃபெடரருக்கு அப்போது வயது 9. அவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டு டென்னிஸ் பயிற்சி அளித்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளரான பீட்டர் கார்ட்டர். அப்போதே ஃபெடரரின் திறமையை அடையாளம் கண்டுகொண்ட கார்ட்டர், இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த டென்னிஸ் வீரராக வலம் வருவார் என்பதைக் கணித்தார்.

அப்போது முதல் டென்னிஸ் விளையாட்டில் தனக்கு தெரிந்த பல்வேறு உத்திகளை ஃபெடரருக்கு கற்றுக்கொடுத்தார் கார்ட்டர். அவர் எதிர்பார்த்தது போலவே ஃபெடரரும் அசாத்தியமான வீரராக உருவெடுத்தார். சர்வதேச போட்டிகளில் கலக்க ஆரம்பித்தார்.

கார்ட்டர் மரணம்: ஃபெடரர் தனது 21-ஆவது வயதில் டென்னிஸில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவருடைய துரோணாச்சாரியரான பீட்டர் கார்ட்டர் மரணமடைய நொறுங்கிப் போனார் ஃபெடரர். 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி பீட்டர் கார்ட்டர் தனது மனைவியுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அப்போது கார்ட்டருக்கு 37 வயது.

கார்ட்டரின் மரணம் ஃபெடரருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கார்ட்டர் மறைந்தாலும் அவருக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்ற கனல் மட்டும் ஃபெடரருக்குள் கனன்று கொண்டே இருந்தது. கார்ட்டரையும், அவர் கற்றுக்கொடுத்த பால பாடங்களையும் மனதில் நிறுத்திக் கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க தொடங்கினார் ஃபெடரர்.

கெளரவம்: ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது தனது வளர்ச்சிக்குக் காரணமான பீட்டர் கார்ட்டருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் ஃபெடரர். அதனால், 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் தான் விளையாடுகிறபோது கார்ட்டரின் பெற்றோரை போட்டியைக் காண அழைத்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் வசிக்கும் அவர்களை போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் அழைத்து வருகிறார் ஃபெடரர். தான் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அவர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதோடு, இதர செலவுகள் மொத்தத்தையும் ஃபெடரரே ஏற்றுக் கொள்கிறார். ஆஸ்திரேலிய ஓபனின் வெற்றிக் கொண்டாட்டம், அதைத் தொடர்ந்து நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் கார்ட்டரின் பெற்றோரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஃபெடரர்.

ஆஸ்திரேலிய ஓபனின்போது ஃபெடரருடைய குடும்பத்தினருக்காக ஒதுக்கப்படும் சிறப்பு இருக்கையில் அமர்ந்து போட்டியைக் கண்டுகளிக்கும் கார்ட்டரின் பெற்றோர், தங்களுடைய மகன், ஃபெடரருக்குள் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் தங்கள் மகனுடைய ஆட்டத்தையே பார்ப்பதாக அவர்கள் நெகிழ்கிறார்கள். ஃபெடரர் ஆகச்சிறந்த மனிதர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீரர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு வெற்றிக்கு அடித்தளமிட்ட பயிற்சியாளர்களையே மறந்துவிடுகிறார்கள். ஆனால் டென்னிஸ் உலகின் உச்சத்தில் இருக்கும் ஃபெடரரோ, தன்னை டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்திய கார்ட்டர் மறைந்தபோதிலும், அவருக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அவருடைய பெற்றோரை இப்போதும் கெளரவித்துக் கொண்டிருக்கிறார். ஃபெடரர் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கலாம். அவற்றை வெல்லாமல் போயிருந்தாலும் அவர் மிகச் சிறந்த மனிதராக இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

வாழ்வில் எந்த உயரத்துக்கு சென்றாலும், நம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நபர்களை என்றுமே மறக்கக் கூடாது என்பதே ஃபெடரரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
ஃபெடரர், தொடரட்டும் உங்கள் மனிதநேயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.