சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அஸ்வின் தனது கண்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஆவர். தனது மயக்கும் சுழற்பந்து வீச்சு மூலம் நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
அவர் சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த கண் தான் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றார். அப்பொழுது அவர் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் அவர் , 'நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள்' என்று ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ‘கண்தானம் செய்வது என்பது எனது மனைவி பிரித்தியின் நெடுநாள் கனவாகும். எனது ரசிகர்களும் இதை பின்பற்றி தங்களது கண்களை தானம் செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் உள்ள திருப்தி வேறு எதிலும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‘ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது டிஎன் 2026!

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


