

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 498 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 498 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஷிகர் தவன் 190, புஜாரா 153, ரஹானே 57, ஹார்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தனர். இலங்கைத் தரப்பில் நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 54, தில்ருவான் பெரேரா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இலங்கை 291: 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் மேத்யூஸ்-பெரேரா ஜோடி சிறப்பாக ஆட, அந்த அணி 56.3 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. இலங்கை அணி 58.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடியைப் பிரித்தார் ஜடேஜா. மேத்யூஸ் 130 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த ரங்கனா ஹெராத் 9 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அசத்தலாக ஆடிய தில்ருவான் பெரேரா 94 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு பெரேரா அதிரடியாக ஆட, மறுமுனையில் நுவான் பிரதீப் 10, லஹிரு குமாரா 2 ரன்களில் வெளியேற, இலங்கையின் இன்னிங்ஸ் 78.3 ஓவர்களில் 291 ரன்களோடு முடிவுக்கு வந்தது. பெரேரா 132 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குணரத்னே காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியதால், அவர் பேட் செய்யவில்லை.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா-189/3: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இலங்கை அணிக்கு "பாலோ-ஆன்' கொடுக்காமல் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் குவித்த ஷிகர் தவன் இந்த முறை 14 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த சேதேஷ்வர் புஜாரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அபிநவ் முகுந்துடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. இந்த ஜோடி அசத்தலாக ஆட, 25-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. இதன்பிறகு அபிநவ் முகுந்த் 78 பந்துகளில் அரை சதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 2-ஆவது அரை சதம் இது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி 68 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டியில் கோலி அடித்த 15-ஆவது அரை சதமாகும்.
இந்தியா 46.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்திருந்தபோது அபிநவ் முகுந்த் ஆட்டமிழந்தார். அவர் 116 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்தார். அதோடு 3-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கோலி 114 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா, லஹிரு குமாரா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
வெற்றிப் பாதையில் இந்தியா: தற்போதைய நிலையில் இந்தியா 498 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ஆவது நாளான சனிக்கிழமை காலையில் இந்திய அணி கூடுதலாக 50 முதல் 100 ரன்கள் வரை சேர்த்துவிட்டு டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலே மைதானத்தைப் பொறுத்தவரையில் 4-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்வது கடினமானதாகும். 2014-இல் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 99 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே காலே மைதானத்தில் 4-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்த ஓர் அணி எட்டிய அதிகபட்ச இலக்காக உள்ளது. அதனால் இந்திய அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
துளிகள்...
81
இலங்கைக்கு எதிராக 81 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார் அபிநவ் முகுந்த்.
309
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் முன்னிலை பெற்றதன் மூலம் இலங்கை மண்ணில் தனது அதிகபட்ச முன்னிலையை பதிவு செய்துள்ளது இந்தியா. இதற்கு முன்னர் 2015-இல் இதே காலே மைதானத்தில் இந்தியா 192 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
ஸ்கோர் போர்டு
இந்தியா-600 (ஷிகர் தவன் 190, புஜாரா 153, ரஹானே 57, பாண்டியா 50, நுவான் பிரதீப் 6வி/132, லஹிரு குமாரா 3வி/131).
இலங்கை
திமுத் கருணாரத்னே எல்பிடபிள்யூ (பி) உமேஷ் 2 (9)
உபுல் தரங்கா ரன் அவுட் (முகுந்த்/சாஹா) 64 (93)
தனுஷ்கா குணதிலகா (சி) தவன் (பி) சமி 16 (37)
குஷல் மென்டிஸ் (சி) தவன் (பி) சமி 0 (4)
ஏஞ்செலோ மேத்யூஸ் (சி) கோலி (பி) ஜடேஜா 83 (130)
நிரோஷன் டிக்வெல்லா (சி) முகுந்த் (பி) அஸ்வின் 8 (15)
தில்ருவான் பெரேரா நாட் அவுட் 92 (132)
ரங்கனா ஹெராத் (சி) ரஹானே (பி) ஜடேஜா 9 (13)
நுவான் பிரதீப் (பி) பாண்டியா 10 (26)
லஹிரு குமாரா (பி) ஜடேஜா 2 (12)
அசேலா குணரத்னே காயத்தால் விலகல் 0 (0)
உதிரிகள் 5
விக்கெட் வீழ்ச்சி: 7-1 (கருணாரத்னே), 68}2 (குணதிலகா),
68}3 (மென்டிஸ்),125}4 (தரங்கா), 143}5 (டிக்வெல்லா),
205}6 (மேத்யூஸ்), 241}7 (ஹெராத்), 280}8 (பிரதீப்), 291}9 (குமாரா).
பந்துவீச்சு: முகமது சமி 12-2-45-2, உமேஷ் யாதவ் 14-1-78-1,
அஸ்வின் 27-5-84-1, ரவீந்திர ஜடேஜா 22.3-3-67-3,
ஹார்திக் பாண்டியா 3-0-13-1.
இந்தியா
ஷிகர் தவன் (சி) குணதிலகா (பி) பெரேரா 14 (14)
அபிநவ் முகுந்த் எல்பிடபிள்யூ (பி) குணதிலகா 81 (116)
சேதேஷ்வர் புஜாரா (சி) மென்டிஸ் (பி) குமாரா 15 (35)
விராட் கோலி நாட் அவுட் 76 (114)
உதிரிகள் 3
மொத்தம் (46.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 189
பந்துவீச்சு: நுவான் பிரதீப் 10-2-44-0, தில்ருவான் பெரேரா 12-0-42-1, லஹிரு குமாரா 11-1-53-1, ரங்கனா ஹெராத் 9-0-34-0, தனுஷ்கா குணதிலகா 4.3-0-15-1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.