பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி! கடைசி லீக் போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயம்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2017, 4:06 am

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஆடிய இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டதால் கடைசி லீக் போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. வார்னர் 40, ஸ்மித் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தொடர்ந்து மழை பெய்ததாலும் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

ஏற்கெனவே நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும் மழையால் தடைபட்டது. இதனால் இரு போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி கைவசம் இரு புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. 

கடைசி லீக் போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் ஆஸ்திரேலியா. தோற்றுப்போனால் வாய்ப்பில்லை. வங்கதேசம் - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் வெற்றி பெறுகிற அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.